மேலூர் அருகே கோவில் கும்பாபிஷேகம்.

Sep 14, 2024 - 05:40
 0  1
மேலூர் அருகே கோவில் கும்பாபிஷேகம்.

மதுரை மேலூர் ஓட்டக்கோவில்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வடக்குவாசல் செல்வி அம்மன் முன்னோடி ஸ்ரீ நொண்டிக் கருப்பர் ஆலய நூதன கல் கோபுர மண்டபத்தின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா இன்று(செப்.13) சிறப்பாக நடைபெற்றது.

இதற்காக பக்தர்கள் தொடர்ந்து 15 நாட்கள் கடுமையான விரதமிருந்து வந்தனர். நேற்று மங்கள இசையுடன் சாந்தி பூஜை, விக்னேஸ்வரா பூஜை, கணபதி ஹோமம் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டுள்ள யாகசாலையில் இருந்து புனித நீரினை சிவாச்சாரியார் தலைமையில் காப்பு கட்டிய பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து இ. மலம்பட்டி வி. என். எஸ். கார்த்திகேயன் சிவாச்சிரியார் தலைமையில் சிவாச்சிரியார்கள் வேத மந்திரம் முழங்க புனித நீரினை கும்பத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ செல்வி அம்மன், ஸ்ரீ நொண்டிக் கருப்பர் சுவாமிக்கு விசேஷ தீபாரதணை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தகோடிகள் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அய்யாபட்டி, திருச்சுனை, பட்டமங்களபட்டி, தற்காகுடி,மலம்பட்டி, உடப்பன்பட்டி, செக்கடிபட்டி, கருங்காலகுடி, கம்பூர், மணப்பட்டி, வஞ்சிநகரம் , மேலூர் ஆகிய சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தகோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow