100 நாள் வேலைத்திட்டத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு.
1.
மதுரை அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தில் ஆளுங்கட்சியினர் தலையீடு உள்ளது என்று புகார் எழுந்துள்ளது.
மதுரை வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 23 ஊராட்சிகள் உள்ளது.
இங்கு 2024-2025-ம் ஆண்டுக்கு MGNREGS திட்டத்தின் கீழ் வேலைகளுக்கான வேலை உத்தரவு ஊராட்சி செயலர் பெயரில் வழங்கப்பட்டு VENDOR களை ஊராட்சி மன்றத் தலைவர் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நடைமுறை.
தற்பொழுது VENDOR களை நிர்ணயம் செய்ய விடாமல், சோழவந்தான் எம்எல்ஏ, தி. மு. க. ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், வட்டார வளர்ச்சியாளர் ஆகியோர் பணிகளை செய்யவிடாமல் தடுத்து வருவது ஊராட்சி மன்ற தலைவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
வாடிப்பட்டி ஒன்றிய கூட்டமைப்பு தலைவரும் நாச்சிகுளம் ஊராட்சி மன்ற தலைவருமான சுகுமாரன் கூறுகையில், சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன், வாடிப்பட்டி யூனியன் கமிஷனர் ஆகியோர் தாங்கள் சொல்லும் நபர்களுக்கு 100 நாள் பணிகளை வழங்க வேண்டும் என்று வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளார்கள்.
இது ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறிக்கும் செயல். ஊராட்சி மன்ற தலைவருக்கு உள்ள அதிகாரத்தில் ஆளுங்கட்சியினர் குறுக்கிட்டு அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இது குறித்து, ஆட்சித் தலைவருக்கும், முதலமைச்சருக்கும் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.
What's Your Reaction?