மக்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கிராம மக்கள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறியதை பார்க்க முடிந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி அருகே திருமால் கிராமத்தில் அமையவுள்ள சக்திவேல் கல் குவாரிக்கான கருத்து கேட்பு கூட்டம் இன்று (செப்.18) நடைபெற்றது.
இதில் நேதாஜி தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், அண்ணாதுரை மக்கள் சட்ட உரிமை இயக்கம், செல்வராஜ் கனிம வள கொள்ளைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, ஞானசேகரன் சமூக ஆர்வலர் மற்றும் சுற்று சூழல் அமைப்புகள், விவசாய சங்கங்கள், மக்கள் நல இயக்க செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கிராமமே திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனை தொடர்ந்து
வீடுகள், கண்மாய்கள், உயர்மின் கோபுரங்கள் உள்ள இடத்தில் எவ்வாறு குவாரி அமைக்க அனுமதி அளிக்க முடியும் என பொது மக்கள் எழுப்பிய சராமரியான கேள்விகளுக்கு அதிகாரிகள் முறையான பதில் அளிக்க முடியாமல் திணறினார்கள்.
What's Your Reaction?