மிலாடி நபியை முன்னிட்டு மதுக்கடைகள் அடைப்பு
வரும் செப். 17ம் தேதி மிலாடி நபி தினத்தையொட்டி, மதுரை மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளும் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் சங்கீதா வெளியீட்டுள்ள அறிக்கையில்: செப். 17 அன்று மிலாடி நபி தினத்தை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய பார், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும்.
செப். 17ல் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்கவும், அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
What's Your Reaction?