மதுரை: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

Oct 2, 2024 - 07:02
 0  1
மதுரை: துணை முதலமைச்சர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்.,30) இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

மதுரை விமான நிலைய அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் , தங்கம் தென்னரசு , மூர்த்தி, பி டி ஆர் பழனிவேல் ராஜன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை மாநகர மேயர் இந்திராணி பொன் வசந்த், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் மதுரை விமான நிலைய வாயிலில் காத்திருந்த ஏராளமான பெண்கள், கட்சி தொண்டர்களிடம் சால்வை வாங்கி கைகுலுக்கி வரவேற்பை ஏற்றுக்கொண்டார். விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட துணை முதல் உதயநிதி ஸ்டாலினுக்கு பெருங்குடி சந்திப்பு அம்பேத்கர் சிலை மற்றும் மண்டேல நகர் சந்திப்பு வரைஅமைச்சர் மூர்த்தி தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விமல் ஆகியோர் ஏராளமான தொண்டர்களுடன் வரவேற்பு அளித்தனர்.

மதுரை விமான நிலையம் முதல் ரிங் ரோடு வரை துணை முதலமைச்சர் உதயநிதியை சந்திக்கும் விதமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow