பேருந்து நிலைய விரிவாக்க பணி; ஆலோசனை கூட்டம்
உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று (செப்.,30) நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி வசமுள்ள, நகராட்சிக்கு சொந்தமான சந்தைத் திடலில் உள்ள 7. 85 ஏக்கர் நிலம் நகராட்சியிடம் ஒப்படைக்கவும், அவ்விடத்தை நகராட்சியே வளர்ச்சிக்கு பயன்படுத்த ஆணையிடப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணி, நவீன வசதிகளுடன் தினசரி சந்தை, வணிக வளாகம், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மூலம் துாய்மை பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (செப்.,30) மாலை நடந்தது. நகராட்சித் தலைவர் சகுந்தலா, கமிஷனர் அசோக்குமார், வர்த்தக சங்கத்தினர், கட்சி பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், விரிவாக்க பகுதியில் கடைகள் வைத்துள்ளோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?