சோழவந்தான்: விவசாயிகள் கடும் வேதனை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, மேட்டு நீரேத்தான் முதல் கட்ட குளம் வரை 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முதல் போக சாகுபடிக்கான நெல் விவசாயம் செய்யப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களின் இடையே அதிக அளவில் களைகள் வளர்ந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நெற்பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த களையானது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில், புது வகையாக தெரிவதால் நெற் பயிர்களுக்கும் களைகளுக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில், நெற்பயிர் உடன் சேர்ந்து வளர்ந்துள்ளதால், தற்போது களைகள் அதிகமாகி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படுகிறது என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
What's Your Reaction?