பாண்டிய மன்னர் காலத்திய கோவிலில் கும்பாபிஷேகம்.
1.
மதுரை வில்லாபுரத்திலுள்ள காளியம்மன் கோவில். பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய அழகப்பா பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியார் வகையறாக்களின் குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது.
பாண்டிய மன்னர்கள் காலத்தில் படைத் தளபதிகளாக இருந்தபோது அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் வில்லாபுரத்தில் உள்ள பாகற்காய் மண்டபத்தில் , சொக்கர் எழுந்தருளுவார்.
இந்நிலையில் 16 வருடங்களுக்கு பின் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில்
கடந்த இரண்டு நாட்களாக யாக கால பூஜைகள் நடைபெற்றன.
மூன்றாம் நாளான நேற்று(செப்.8) நான்காம் கால யாகசாலை பூஜைகள் கோ பூஜையுடன் பூர்ண ஹூதியுடன் நிறைவு பெற்றது. சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகத்திற்கு கும்பங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கலசங்களுக்கு புனித நீரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ரமேஷ் ராமசந்திரன் உள்ளிட்ட பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, தெற்கு சரக ஆய்வாளர் மதுசூதனன் ராயர், செயல் அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?