விநாயகர் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்த...
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் இந்து முன்னணி சார்பில் 24 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து மக்கள் எழுச்சி விழா நேற்று (செப்.,12) நடைபெற்றது.
இதற்கு மணல்மேட்டுபட்டி கிராம தலைவர் எஸ். சண்முகம் தலைமை தாங்கினார். பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி மத்திய அரசு வழக்கறிஞர் மாநில செயலாளர் எஸ். முத்துக்குமார், ஆர். எஸ். எஸ் மாவட்ட இணைச் செயலாளர் எஸ். வீரக்குமார், ஆர். எஸ். எஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாவட்ட பொறுப்பாளர் அழகேசன், விழா குழு தலைவர் ஆர். அன்பு, துணைத்தலைவர் எஸ். அன்பு, செயலாளர் எஸ். வினோத்குமார், பொருளாளர் கே. பிரபு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விநாயகர் ஊர்வலத்தை எச். ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். விநாயகர் ஊர்வலம் ஊராட்சி சமுதாய மண்படத்தில் தொடங்கி சிவன்கோவில் வழியாக சென்று ஏ. டி காலணி, செட்டியார்தெரு, பள்ளிவாசல் தெரு, குறுக்கள் குளம், சிவன் சக்தி விநாயகர் சென்று வடக்கு தெரு வழியாக அம்மன்கோவில் சேங்கை குளம் கொண்டு சென்று விநாயகரை கரைத்தனர். ஊர்வலத்திற்கு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
What's Your Reaction?