சாதிய வன்கொடுமைகளில் மதுரை முதலிடம்- ஆர்டிஐ அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகமாக நடக்கும் மாவட்டங்களில் டாப்-10 பட்டியலில் 45 எண்ணிக்கையுடன் மதுரை தொடர்ந்து முதல் இடம் பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 394 கிராமங்களில், தென் மாவட்டங்களில் மட்டும் 171 கிராமங்கள் இடம் பிடித்துள்ளன என காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி மக்கள் கருத்து கேட்பு நடத்தப்பட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்களில் அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு
கூட்டங்கள் நடத்துவதோடு ஆக்கப்பூர்வமாக சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிய வன்கொடுமைகள் பதற்றம் நிறைந்த கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள 304 கிராமங்களை ரோல் மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறான மாடல் கிராமங்களை ஊக்கப்படுத்தும் விதமாக ரூ. 25 லட்சம் பரிசுத் தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
What's Your Reaction?