காவல் ஆணையர் மன்னிப்பு கேட்டதாக பரவிய போலியான தகவல்
சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். அப்போது, “ரௌடிகளுக்கு புரியும் மொழியில் பாடம் கற்பிக்கப்படும்” என தெரிவித்தார். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து, ஆணையர் அருணுக்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், காவல் ஆணையர் அருண், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதாக செய்தி வெளியானது போலியான தகவல் என தற்போது தெரியவந்துள்ளது.
What's Your Reaction?