மாற்றுத்திறனாளி தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தற்கொலை
தாழம்பூர் அருகே காரணை வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜா(55). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் தனது வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாழம்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?