விழிப்புணர்வு கூட்டத்தில் காவல் துணை ஆணையர் பங்கேற்பு
1.
மதுரை திருப்பரங்குன்றம் அருகே விழிப்புணர்வு பிரச்சார கூட்டத்தில் காவல் துணை ஆணையர் கலந்து கொண்டார்.
மதுரை மாநகர் காவல்துறையின் மதுவிலக்கு பிரிவின் சார்பாக, கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மதுரை செளராஷ்ட்ர கல்லூரியில் நடைபெற்றது.
மதுரை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் திருமதி. வனிதா அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரி முதல்வர் திரு. சீனிவாசன் மற்றும் ஒருங்கிணைப்பாளரும் இயற்பியல் துறையின் உதவி பேராசிரியருமான திரு. மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?