பெண்களை பாதுகாக்க "உள்ளக குழு" அமைக்க ஆட்சியர் உத்தரவு

Sep 1, 2024 - 05:48
 0  67
1 / 1

1.

மதுரை மாவட்டத்தில் பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 மற்றும் 10 க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணி இடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2013 (குடுப்பு, தீர்வு, தடை) ன் படி உள்ளக குழு (Internal Committee) கட்டாயம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும் மற்றும் குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் தொண்டு நிறுவனம்/சமூக செயல்பாட்டாளர்/சட்ட வல்லுனர்கள்/சமூகபணி கல்வியாளர்கள் கொண்டு உள்ளக குழு அமைக்கப்பட்டு அரசு விதிமுறைகளின் படி புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும்.

உள்ளக குழு (IC) அமைக்காத நிறுவனங்கள் மீது சட்டம் ரூ. 50000/- வரை அபாரதம் விதிக்கபடும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் குழு அமைத்த விபரம் மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தபால் மூலமாக மாவட்ட சமூகநல அலுவலகம், 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை-625020 என்ற முகவரிக்கும் மின்னஞ்சல் மூலமாக dswomadurai@gmail. com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow