ஓசூர் அருகே தரைப்பாளத்தை மூடிய ரசாயன நுரை
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் விநாடிக்கு நான்காயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரில் அதிகப்படியான கழிவுகள் கலக்கப்பட்டுள்ளதால் சுமார் 5அடி உயரத்திற்கு ரசாயன நுரைகள் பொங்கியபடி வருகிறது. இதனால் நந்திமங்கலம் சாலையில் உள்ள தட்டனப்பள்ளி அருகேயுள்ள தரைப்பாலம் ரசாயன நுரையில் மூழ்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
What's Your Reaction?