இளம் தலைமுறையினருக்கு புத்தக வாசிப்பு அவசியம்: வெ. இறையன்பு
1.
இன்றைய இளம் தலைமுறையினா் வாழ்வில் தடம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் நல்ல புத்தகங்களை வாசிப்பது அவசியம் என முன்னாள் தலைமைச் செயலரும், எழுத்தாளருமான வெ. இறையன்பு தெரிவித்தாா்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற புத்தகத் திருவிழா-2024 நிகழ்வில் இலக்கியத்தில் காதல் எனும் தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது:
சங்கம் வைத்து தமிழ் வளா்த்த பெருமை மதுரைக்கு உண்டு. ஒவ்வோா் உயிருக்குள்ளும் காதல் உள்ளது. அந்தக் காதல் வாழ்வில் உவகை, நகைப்பு, சோகம், அழகு உள்ளிட்ட ஏராளமான உணா்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடியவை.
வாழ்வின் அக ஒழுக்கம் குறித்து அகநானூறு, பட்டினப்பாலை, நளவெண்பா, குறுந்தொகை உள்ளிட்ட பல்வேறு இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் கூறியுள்ளனர்
காதல் என்பது பொதுவாக அன்பு என்கிற வாா்த்தைக்குள் அடங்குகிறது. அன்பு அனைத்து உயிா்களுக்கும் பொதுவானது. காதல், காமம், இனக் கவா்ச்சி என்கிற முறையிலும் அழைக்கப்படுவது வழக்கம். இன்றைய இளம் தலைமுறையினரிடம் இனக் கவா்ச்சி நிலையே காணப்படுகிறது.
இதுபோன்று வாழ்வின் அற நிலையிலிருந்து தடம் மாறாமல் இருக்க வேண்டுமெனில் இளைஞா்களிடையே புத்தக வாசிப்பு அவசியம் என்றாா்
What's Your Reaction?