உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் இடத்தை ஆய்வு செய்த அமைச்சர்
1.
மதுரை அருகே ஒத்தக்கடை பகுதியில் நடைபெறவுள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா முன்ஏற்பாடுகளை அமைச்சர் நேற்று (செப்.7) ஆய்வு செய்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை வேலம்மாள் காம்பவுண்டில் (விவசாய கல்லூரி எதிரே ) அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதாஅவர்கள், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் அவர்கள் உட்பட உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
What's Your Reaction?