வீணான பொருட்களிலிருந்து தயாரான கலை பொருட்கள்
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சார்பில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் மூலம் தோப்பூர் ஊராட்சியில் 37 மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மேம்பாட்டு தொழில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ஏழு நாட்கள் நடந்த இந்த முகாமில் கைவினை பொருட்கள் தயாரித்தல், ஊதுபத்தி, மெழுகுவர்த்தி, ஆரி வேலைப்பாடுகள், வீணாகும், கழிவுப் பொருட்களில் இருந்து விலைமதிப்புள்ள கலைப் பொருள்கள் தயாரித்தல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் பொருட்களை சந்தைப்படுத்தவும் ஆலோசனையும் பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று (அக். 2) நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லுாரி முதல்வர் ராமசுப்பையா தலைமை தாங்கினார். ஊராட்சித் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் ஜெயபாலகிருஷ்ணன், ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் பயிற்சியை ஒருங்கிணைத்தனர். இதில் பெண்கள் தயாரித்த பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. அதில் வீணான பொருட்களிலிருந்து தயாரான கலைப் பொருள்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது எனலாம்.
What's Your Reaction?