கிருஷ்ணகிரியில் குட்கா கஞ்சா லாட்டரி விற்ற 31 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசார் ரோந்து செல்கின்றனர். அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மளிகை, பெட்டிக்கடைகளில் குட்கா விற்றதாக 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஓசூர் டவுன், அஞ்செட்டி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 7 பேர் மற்றும் லாட்டரி சீட்டு விற்ற 8 பேருடன் பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை கைது செய்துள்ளனர்.
What's Your Reaction?