செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸ் தேடுகிறது.
மதுரை எஸ். எஸ். காலனி பவானி தெருவை சேர்ந்த திருவள்ளுவன் (80) என்பவர் வீட்டில் இருந்தபோது இவரது செல்போனுக்கு பெயர் விபரம் தெரியாத நம்பரிலிருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் அவரை ஆபாசமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அரசு திருமாவளவன் எஸ். எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆசாமி யார் என்று தேடி வருகின்றனர்.
What's Your Reaction?