போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்கள் கைது

Sep 30, 2024 - 06:42
 0  2
போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கியவர்கள் கைது

மதுரை மாநகர கீரைத்துறை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் நேற்று முன்தினம்(செப்.28) இரவு தெருவில் நிறுத்தி இருக்கும் வாகனங்களை சேதப்படுத்துவதாக கருப்பையா மகன் கண்ணன் (65) என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிந்தாமணி பகுதியை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்பவரது மகன் சக்திவேல் (26) சிந்தாமணி அழகர் நகரை சேர்ந்த செந்தில் வேல்முருகன் மகன் உமா மகேஸ்வரன் (18) மற்றும் கூட்டாளிகளான 3 இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் அளவுக்கு அதிகமான மது போதையில் அந்த பகுதிகளில் குடியிருக்கும் பொது மக்கள் தங்களது வீட்டின் முன்பு தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் ஆட்டோக்கள், லோடு வாகனத்தை சேதப்படுத்தி கண்ணாடிகளை உடைத்தும் இரு சக்கர வாகனங்களின் சைடு கண்ணாடிகளை உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கீரைத்துறை காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow