புதுவை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை
புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து 78 க்கும் மேற்பட்ட நபர்கள் இணைய வழி மோசடி காரர்களால் ஏமாற்றப்பட்டனர். அதே போல் கடந்த 3 நாட்களில் 2 புகார்கள் பெறப்பட்டு 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பொதுமக்கள் இழந்துள்ளனர். ஆகவே பொதுமக்கள் ஆன்லைனில் பட்டாசு ஆர்டர் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?