புதுக்கடை: கம்பியில் மோதி வாலிபர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே கீழ்குளம், சுனவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்து ராஜ் மகன் கெபீஸ் ராயல் (20). பிளஸ் 2 வரை படித்த இவர் ஒலி ஒளி நிலையம் ஒன்றில் கூலிக்கு வேலை பார்க்கிறார்.
நேற்று (7-ம் தேதி) இரவு நண்பர் ஒருவரின் பைக்கில் மார்த்தாண்டம் பகுதிக்கு சென்று விட்டு இரவில் தேங்காபட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். புதுக்கடையை அடுத்த அம்சி பகுதியில் செல்லும்போது, குறுக்கே நாய் ஒன்று பாய்ந்துள்ளது. இதில் நிலை தடுமாறி சாலையோரம் நடப்பட்டிருந்த கம்பி ஒன்றில் மோதியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த கெபீஸ் ராயலை அக்கம் பக்கத்தினர் மீட்டு, குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியில் கெபிஸ் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?