மசாஜ் சென்டரில் விபச்சாரம்; மூவர் கைது
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அருகே பாரதி தெருவில் ஆயுர்வேதிக் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்ததால் விசாரிக்க தொடங்கினர்.
காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜா வாடிக்கையாளர் போல சென்று மசாஜ் செய்வதற்கான விவரங்களை கேட்டுள்ளார். மசாஜ் செய்ய ரூ. 1500 மட்டும் செலுத்த வேண்டும், மற்ற விவரங்களுக்கு அறைக்குள் தனியாக பணம் கொடுக்க வேண்டும் என்று வரவேற்பு அறையில் இருந்த பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டதால். காவல் ஆய்வாளர் லட்சுமி லதா, உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் பெண் போலீசார் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள், மதுரையை சேர்ந்த ஒரு நபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மசாஜ் சென்டர் நடத்திய பெண், அவரது கணவர் ஆறுமுகத்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
What's Your Reaction?