கைப்பந்து போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு பரிசு
2024 – 25ஆம் ஆண்டுக்கான பாரதியார் மற்றும் குடியரசு தின விழா போட்டிகளில் தி.மலை வருவாய் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் இறையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று திருச்சியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளனர். வருவாய் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் கணேசகிரிவாசன் பாராட்டினார்.
What's Your Reaction?