பெரியாறு கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்
மதுரை மாவட்டம் மேலூரில் பெரியாறு கால்வாயில் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரியாறு, வைகை அணைகளின் கடை மடை விவசாய பகுதியாக மேலூர் பகுதி உள்ளது. இதனால் அணையின் நீர்மட்ட அளவை கொண்டு ஆகஸ்ட் மாதங்களில் இப்பகுதிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு செப். 15ல் தண்ணீர் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு மேலூர் பகுதியில் உள்ள பெரியாறு கால்வாய்களில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் பொதுப்பணி துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இப் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று (செப்.,12) பார்வையிட்டனர். இதனை இப்பகுதி விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
What's Your Reaction?