இம்மானுவேல் சேகரன் 67வது குருபூஜை விழா: பாலமேட்டில்
மதுரை மாவட்டம் பாலமேட்டில் இம்மானுவேல் சேகரன் 67வது குருபூஜை விழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெரு தேவேந்திர குல வேளாளர் உறவின்முறை சங்கம் சார்பாக வானவேடிக்கை மேளதாளம் முழங்க பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி, பால் குடம் எடுத்து வந்து நுழைவு வாயிலில் உள்ள திருவுருவ படத்திற்கு மாலை அனைவித்து பாலாபிஷேகம் செய்தனர். அதனை தொடர்ந்து உறவின்முறை சங்க கட்டிடம் முன்பாக உள்ள அவரது படத்திற்கு மாலை அணிவித் அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டு மரியாதை செய்தனர். இதில் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?