கோயில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள்
சேடப்பட்டி அருகே கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் சேடப்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள பெத்தனசாமி கோயிலில் ராதாகிருஷ்ணன் (50) என்பவர் பூசாரியாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் (செப்.,13) இரவு வழக்கம் போல கோவிலை அடைத்துவிட்டு நேற்று (செப்.,14) காலை மீண்டும் கோவிலை சுத்தம் செய்ய வந்த போது. கோயிலில் இருந்த உண்டியல் திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து சேடப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் 2 பேர் உண்டியலை உடைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மேலும் சேடப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
What's Your Reaction?