கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது

Nov 16, 2024 - 16:33
 0  0
கொலை வழக்கில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐந்து பேர் கைது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே கொடியாலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கணபதி. இவரது மகன் விஷ்ணு (24). இவா் நேற்று நவம்பர் 15ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியாலத்திலிருந்து அரசுப் பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.அப்போது பேருந்து திண்டுக்கரை அருகே சென்றுக் கொண்டிருந்த போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 5 போ் கொண்ட கும்பலில் ஒருவா் பேருந்தினுள் ஏறி விஷ்ணுவை அடித்து பேருந்தினுள் இருந்து கீழே தள்ளி விட்டார். அதன் பின்னா் 5 போ் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் விஷ்ணுவை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதில் விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் போலீசா விஷ்ணுவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீசார் இந்த கொலைச் சம்பவம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.இது குறித்து போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஓா் ஆண்டுக்கு முன்னா் ஏற்பட்ட தகராறில் கோகுல் என்பவர் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலையில் விஷ்ணுவுக்கும் தொடா்பிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அதற்கு பழிக்குப்பழியாகவே இச்சம்பவம் நடைபெற்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. விஷ்ணு சமீபத்தில் தான் ஜாமினில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்ணுவை நோட்டமிட்ட கும்பல் நேற்று பழிக்குப்பழியாகவே இந்த கொலையை செய்திருக்கிறது.இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் கடந்த 2013ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சகோதரர் ஆகாஷ்(23), அவரது 17 வயது சகோதரர் ஒருவர், மணிமாறன்(22), 17 வயதுடைய 2 பேர் என மொத்தம் 5 பேர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் 5 பேரும் இன்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.பழிக்குப்பழியாக நடந்த கொலை சம்பவத்தில் 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow