ராமநாதபுரத்தில் ரூபாய் 2 கோடி மதிப்பில் போதை பொருள்கள் பறிமுதல்
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் போலீசார் இருவரை மடக்கி சோதனையிட்டனர். அவர்களிடம் 300 கிராம் ஐஸ் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் இருந்ததை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேவிபட்டினம் சின்னப்பள்ளி வாசல் தெரு முகமது ஹாரிஸ் (29), ராமநாதபுரம் நேரு நகர் ஜெகதீஷ்(29) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
What's Your Reaction?