பொறியியல் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
மதுரை அருகே அழகர் கோவில் லதா மாதவன் பொறியியல் கல்லூரியில் நேற்று போதை தடுப்பு, விழிப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கை பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் கல்லூரியின் முதல்வர் ஆனந்த பாண்டிஅவர்கள் வரவேற்புரை நிகழ்த்த முதன்மை விருந்தினராக மதுவிலக்கு பிரிவின் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் அவர்கள் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் , குடும்பம் மற்றும் சமூகத்தில் அவர்களுக்கு மரியாதை அற்ற நிலையில் எவ்வாறு பாதிக்கப்படுகின்றார்கள் , மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றார்கள்.
நாட்டின் மக்கள் தொகையில் அதிகம் துடிப்புள்ள இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை எளிதில் அடையலாம். பெற்றோர்களை பாதுகாப்பது ஒவ்வொரு மாணவனின் தலையாய கடமை சிறந்த பதவிகளை அடைந்து நாட்டிற்கு சேவை செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
What's Your Reaction?