கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

Oct 2, 2024 - 06:54
 0  0
கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வுப் பேரணி

மதுரை வக்ஃப் வாரியக் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் சாா்பில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி நேற்று(செப்.30) நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் பேரணியை கல்லூரியின் பொறுப்பு முதல்வரும், பொருளாதாரத் துறைத் தலைவருமான வேலுச்சாமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். சுற்றுச் சூழலை பேணிக் காப்பது, மரங்களை நட்டு பராமரிப்பது, நோயற்ற வாழ்வை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியும், அதுகுறித்த முழக்கங்களை எழுப்பியும் மாணவா்கள் சென்றனா்.

பேரணி முக்கிய வீதிகள் வழியாக வந்து உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறைவு பெற்றது. இதில் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் ஷேக் அப்துல்லா, எம். முகமது மின்னா, யசோதை, எம். முகமது மின்னா உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow