விநாயகர் சிலையை கரைக்க முயன்றவர் பலி
1.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விநாயகர் சிலையை கரைக்க முயன்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகு சிறை கிராமத்தில் நேற்று(செப்.9) இரவு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.
அதன் பின்னர் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது, மதுரை சோலை அழகுபுரத்தை சேர்ந்த சிவன்காளை என்பவர் கிணற்றில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். உடனடியாக திருமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரது உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
What's Your Reaction?