குமரி மாவட்டத்தில் ஒரே நாள் 8 பேர் கைது
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வதனம் உத்தரவின் பேரில் கஞ்சா, குட்கா, அனுமதியின்றி மது விற்பனையை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொல்லங்கோடு, மார்த்தாண்டம், திருவட்டார், ஆரல்வாய்மொழி என மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் குட்கா மற்றும் மது விற்பனை செய்த 1 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
What's Your Reaction?