விநாயகா் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு
1.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இந்து மக்கள் கட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் விளக்குத்தூண் பகுதியில் இருந்து ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த ஊா்வலத்துக்கு இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் சோலை கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் குபேரராஜ்குமாா், மாவட்டச் செயலா் கோவில்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நட்சத்திர நண்பா்கள் அறக்கட்டளை நிறுவனா் தலைவா் குருசாமி, இலங்கை எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோா் ஊா்வலத்தை தொடங்கி வைத்தனா்.
விளக்குத்தூண் பகுதியில் ஊா்வலம் தொடங்கி நகைக்கடை வீதி, யானைக்கல் வழியாக விநாயகா் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தலைமையில் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டிருந்தனா்.
What's Your Reaction?