கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது செய்யப்பட்டு கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே சமயநல்லுார் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர். ரமேஷ் தலைமையில் போலீசார் பரவை பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்று பார்த்த போது இருசக்கர வாகனத்தில் கஞ்சாவுடன் நின்ற மதுரை முனிச்சாலை மணிபாண்டி (32) மேலவாசல் தர்மராஜ் (23) எல்லீஸ் நகர் வைரமுத்துவை (23) ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து 800 கிராம் கஞ்சா, ரூ. 400, ஒரு இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் தொடர் விசாரணையில் உள்ளனர்.
What's Your Reaction?