வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
கானாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா பானு (52). இவருக்கு, நேற்று இரவு ஒரு தொலைபேசியில் இருந்து உங்கள் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாகத் தெரிவித்து இணைப்பை துண்டித்துவிட்டார். பதறிய பாத்திமா தாம்பரம் காவல் கட்டுப்பட்டறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சோதனை செய்தபோது புரளி என தெரிந்தது. பின்னர் விசாரணையில் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் போன் செய்து மிரட்டல் விடுத்தது தெரிந்தது.
What's Your Reaction?