மதுரை: அதிகாரிகள் பணியை செய்வதில்லை என விவசாயி...
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலைச்சேரிபட்டி ஊராட்சி பகுதியில் விவசாய நிலங்களுக்கு செல்லக்கூடிய பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தினை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வேலி போட்டிருந்துள்ளார்.
இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயியான முருகானந்தன் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தொடர்ந்து புகார் மனு அளித்து வந்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி முருகானந்தம் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் ஆக்கிரமிப்பகளை அகற்றக்கோரி உத்தரவிட்ட நிலையில் தற்போது வரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் தங்களது விவசாய பகுதிகளுக்கு செல்ல கடும் சிரமத்திற்கு ஆளாகுவதாக கூறி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற கோரி கடந்த 2 ஆண்டுகளாக விவசாயி முருகானந்தம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய குறைதீர் கூட்டம் மக்கள் குறைதீர் கூட்டம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இதுவரையிலும் 24 நினைவூட்டல் மனுக்களை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளார்.
இதுவரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிலையில் தான் வழங்கி வந்த மனுக்களின் ரசீதுகளை தனது பையில் பேட்ஜ் போல அணிந்து வந்து இன்று(அக்.7) மீண்டும் நினைவூட்டல் மனு அளித்தார்.
What's Your Reaction?