ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள்; இரண்டாவது நாளாக தீவிரம்
சோழவந்தானில் இன்றும் இரண்டாவது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் ஆக்கிரமிப்புகள் அதிகம் காணப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் நகரின் முக்கிய வீதிகளில் இருந்தது இதுகுறித்து பல வருடங்களாக நெடுஞ்சாலை துறைக்கு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று (செப்.,26) காலை முதல் முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இன்று (செப்.,27) இரண்டாவது நாளாக மூலக்கடை பகுதியில் காலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. சோழவந்தான் காவல் நிலைய போலீசார் பாதுகாப்புடன் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருகின்றன.
What's Your Reaction?