பென்னாகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

Oct 22, 2025 - 06:03
 0  23
பென்னாகரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள திருமல்வாடி பேருந்து நிறுத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 50 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் நடந்துசென்று கொண்டிருந்தபோது, பிக்கிலி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் கணேசன் என்பவர் அவளை பின்தொடர்ந்து சென்று, கீழே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.பெண் அலறிய சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற சிலர் அந்த இடத்துக்கு வந்ததும், கணேசன் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.தகவல் கிடைத்ததும் மகளிர் ஹெல்ப்லைன் 181-க்கு புகார் அளிக்கப்பட்டது. பாப்பாரப்பட்டி உதவி ஆய்வாளர் மாரி தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பெண்ணை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசி வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி கணேசனை கைது செய்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow