தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

Oct 26, 2025 - 17:03
 0  34
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா

தருமபுரி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.நிகழ்விற்கு முதன்மை கல்வி அலுவலர் ஐ. ஜோதி சந்திரா தலைமை வகித்தார்.தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் (பொ) ந.ஜோதிலெட்சுமி , தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மு.தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.தருமபுரி மாவட்டக் கம்பன் கழகம் செயலாளர் புலவர்.கா.குமரவேல் வரவேற்று பேசினார்.உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம் சிறப்புத் தலைவர் தமிழ்மகன் ப.இளங்கோ திருக்குறள் திருப்பணிகள் பயிற்சியைத் தொடங்கி வைத்து பேசினார். கம்பன் கழகம் மூத்த ஆலோசகர் புலவர் செ.கோவிந்தராசு, பள்ளி முதுகலை தமிழாசிரியர் கு.மாதையன் ஆகியோர் சிறப்புரை வழங்கினார். தொழிலதிபர் சுரேஷ் , உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ் ஆகியோர் திருக்குறள் சார்ந்த கருத்துரை வழங்கினர். கம்பன்கழகத்தின் இணைச் செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் ஐ.ஜோதிசந்திரா பேசுகையில் ” மாணவர்கள் திருக்குறள் சார்ந்த வாழ்வியல் விழுமியங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நாளும் ஒரு திருக்குறளை மாணவர்கள் வாசிக்க வேண்டும் அதனை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் திருக்குறள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் அறிவார்ந்த தளத்தில் பயணிக்க வேண்டும்.மாணவர்கள் அறநெறி கருத்துள்ள ள்ள புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்றார் இந்நிகழ்வை சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் மா.பழனி ஒருங்கிணைத்தார். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள், மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow