பென்னாகரம் அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற மூதாட்டி சாலை விபத்தில் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சித்ரா (வயது 72), கணவர் மறைவுக்குப் பிறகு தனியாக வசித்து வந்தார்.கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற சித்ரா,மீண்டும் வீடு திரும்பவில்லை.இதையடுத்து, அவரது மகன் கார்த்தி பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இரு நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் தர்மபுரி பிரேத பரிசோதனை அறையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார், கார்த்தியிடம் விவரம் தெரிவித்த போது, அவர் தனது தாய் சித்ரா என்பதைக் உறுதி செய்ததை அடுத்து தாயாரின் சடலத்தை மகனிடம் ஒப்படைத்தனர்.மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?

