லஞ்சம் வாங்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தருமபுரியில் பரபரப்பு

May 16, 2026 - 20:09
 0  191
லஞ்சம் வாங்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தருமபுரியில் பரபரப்பு

தருமபுரி:

தொப்பூர் டோல்கேட் அருகே சரக்கு வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் (மாமூல்) வாங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளனர்.நேற்று இரவு தொப்பூர் டோல்கேட் பகுதியில் எஸ்.ஐ. செல்வபதி தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சரக்கு வாகனங்களிடம் அவர்கள் மாமூல் வசூலிப்பதை தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து இன்று சனிக்கிழமை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் நேரில் விசாரணை நடத்தினார்.விசாரணையில் லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்வபதி, தலைமை காவலர்கள் வெங்கடேசன் மற்றும் பரதன் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow