சேலம் தாதகாப்பட்டியில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் கைது

Oct 18, 2025 - 14:48
 0  26
சேலம் தாதகாப்பட்டியில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் கைது

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி பகுதியில் குடும்ப தகராறைத் தொடர்ந்து துயரச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.தேயிலை மற்றும் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்த கண்ணன் (37) என்பவர், ரதிதேவி (27) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். சுபஸ்ரீ (11), ஸ்ரீகரன் (7) என இரண்டு பிள்ளைகள் பெற்ற இந்த தம்பதியருக்குள் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டது.ரதிதேவியின் நடத்தை குறித்து கணவன் கண்ணன் சந்தேகப்பட்டதால், அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலடைந்த ரதிதேவி இரண்டு மாதங்களுக்கு முன்பு தன் பெற்றோரின் வீட்டிற்கு சென்றிருந்தார்.பின்னர் ரதிதேவியை சமரசப்படுத்த பலமுறை மாமனார் வீட்டுக்குச் சென்ற கண்ணன், இனி சந்தேகப்பட மாட்டேன் என்று பலமுறை கேட்டுக் கொண்டிருந்தாராம். எனினும் ரதிதேவி சமரசம் செய்ய மறுத்ததாக தெரிவித்துள்ளனர்.இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ரதிதேவியை பலமுறை குத்தியுள்ளார். கடுமையாக காயமடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், வழியிலேயே உயிரிழந்தார்.சம்பவ தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, மனைவியை குத்திக் கொன்ற கண்ணனை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow