கள்ளக்காதல் தகராறில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: வாலிபர் கைது
பெரம்பலூர் மாவட்டம் புதுவேட்டக்குடியைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி நந்தினி(28). கணவர் இறந்த பிறகு, அதே ஊரைச் சேர்ந்த பச்சமுத்து(33) என்பவருடன் நந்தினிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக பெரம்பலூர் பாரதிதாசன் நகரில் வாடகை வீடு எடுத்து நந்தினியை பச்சமுத்து தங்க வைத்துள்ளார். இந்த கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்கனவே பச்சமுத்துவின் மனைவி சத்யா ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார்.இந்நிலையில், நந்தினி வேறு சில ஆண்களுடன் செல்போனில் பேசுவதை பச்சமுத்து கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பச்சமுத்து, கத்தியால் நந்தினியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்துவிட்டு தலைமறைவான பச்சமுத்துவை போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?

