ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக பெண் இன்ஸ்பெக்டர் கைது
தர்மபுரியை சேர்ந்த நிர்மல்குமார், 16 வயது சிறுமியுடன் பெற்றோர் சம்மதத்துடன் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்திருந்தார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாகியதால் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோதனையின் போது குழந்தை திருமணம் நடந்தது தெரியவந்தது இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் தகவல் அறிந்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் சென்றது. அதன் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் வீரம்மாள், சிறுமியின் உறவினர்கள் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என கூறியதாக தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் முறையிட்டார். அவர்களின் திட்டமிட்ட பாசாங்கு நடவடிக்கையின்போது, ரசாயன பவுடர் பூசப்பட்ட ரூ.50 ஆயிரம் லஞ்சத் தொகையை பெண் இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம் அவர் பெற்றுகொண்டார். உடனே மறைந்து காத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் தர்மபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?

